• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலி யானையை விரட்டிய தெரு நாய்…! – மிரண்டு ஓடிய யானை..!

May 23, 2022 தண்டோரா குழு

மேட்டுப்பாளையத்தில் உலாவரும் பாகுபலி யானையை தெருநாய் ஒன்று குரைத்து விரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒற்றை காட்டு யானை விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது .இதனை அப்பகுதி மக்கள் பாகுபலி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாகுபலி யானையினை ஆபரேஷன் பாகுபலி என்ற திட்டத்தின் மூலம் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி 3 கும்கி யானைகளை வரவழைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து நேற்று அதிகாலை தேக்கம்பட்டி அடுத்துள்ள சமயபுரம் கிராமத்திற்குள் புகுந்து உலா வந்த பாகுபலி யானை அப்போது அங்கிருந்த தெருநாய் ஒன்று யானையைக் கண்டு அச்சப்படாமல் குரைத்து விரட்டியது.

இதில் பயந்துபோன யானை பிளறியபடி ஓடியது. இதனை அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க