• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானது பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

May 20, 2022 தண்டோரா குழு

உதயநிதி ஸ்டாலின் நடித்த,நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, கோவை மாநகர உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக, பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

பிரபல நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து,அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி..ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோ தயாரிப்பில்,ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே திரையரங்குகளில் நெஞ்சுக்கு நீதி இன்று வெளியானது.கோவை இரயில் நிலையம் சாந்தி திரையரங்கில் படம் வெளியானதை தொடர்ந்து கோவை மாவட்டம் மற்றும் மாநகர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர்.

மாவட்ட தலைவர் இருகூர் பூபதி தலைமையில் நடைபெற்ற இதில்,மாவட்ட செயலாளரும்,87 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் ஆன உதயநிதி பாபு,மாநகர தலைவர் டேவிட் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக கோவை வ.ஊ.சி.மைதான வளாகத்தில் மேள தாளங்களுடன் இரு சக்கர வாகனத்தில் ரசிகர்கள் ஊர்வலமாக படம் வெளியாகிய சாந்தி திரையரங்கற்கு வந்தனர்.

தொடர்ந்து ரசிகர், ரசிகைகள் தங்களது அபிமான நடிகர் நடித்து படம் வெளியானதை கொண்டாடும் விதமாக நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்இந்நிகழ்ச்சியில் மாநகர பொறுப்பாளர் ராகுல் ராம் மற்றும் நிர்வாகிகள் வினோத், முனிப்பாண்டி, செந்தில், அப்பாஸ், சுல்தான்,செல்லா,டேவிட் பீட்டர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க