• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொதுமக்களிடம் கனிவாக பேசவேண்டும் – நகர்நல மைய மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மேயர் அறிவுரை

May 16, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் 7.77 கிலோ மீட்டர் தொலைவிற்கு 60 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் கோவைப்புதூர், இடையர்பாளையம் மற்றும் போத்தனூர் ஆகிய இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற சுகாதார மையம் கட்டுமானப்பணிகள் ஆகியவற்றை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தெற்கு மண்டலம் வார்டு எண் 92 மற்றும் 93க்குட்பட்ட மணிகண்டன் நகர் பகுதியில் ரூ.3.24 கோடி மதிப்பீட்டில் 6.27 கிலோ மீட்டர் தொலைவிற்கு 45 இடங்களிலும், வார்டு எண் 95க்குட்பட்ட திருமறை நகர் பகுதியில் ரூ.74.80 கோடி மதிப்பீட்டில் 1.5 கிலோ மீட்டர் தொலைவிற்கு 15 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகளையும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமானதாகவும் செய்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து வார்டு எண் 90க்குட்பட்ட கோவைப்புதூர், வார்டு எண் 92க்குட்பட்ட இடையர்பாளையம், வார்டு எண் 95க்குட்பட்ட போத்தனூர் ஆகிய இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்நல மையம் கட்டுமானப்பணியினை மேயர் பார்வையிட்டார். தொடர்ந்து 95வது வார்டு போத்தனூர் நகர்நல மையத்திற்கு சென்று ஆய்வு செய்து, சிகிச்சைக்கு வந்த நபர்களிடம் குறைக்களை கேட்டறிந்தார். பொதுமக்களிடம் கனிவாக பேசவேண்டும், தரமான சிகிச்சை வழங்க வேண்டுமென மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, தெற்கு மண்டல உதவி கமிஷனர் அண்ணாதுரை, கவுன்சிலர்கள் இளஞ்சேகரன், அப்துல் காதர், பாபு, ரமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க