• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரசாயனம் மூலம் பழுக்க வைத்த 12 டன் மாம்பழம், 2 டன் சாத்துக்குடி அழிப்பு

May 12, 2022 தண்டோரா குழு

கோவையில் இரசாயனம் மூலம் பழுக்க வைத்த 12 டன் மாம்பழம், 2 டன் சாத்துக்குடி அழிக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரண் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள், கோவை பெரிய கடை வீதி, வைசியால் வீதி, கருப்பன்ன கவுன்டர் வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6 குழுக்களாக பிரிந்து இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் 42 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இரசாயனம் மூலம் பழுக்க வைத்த சுமார் 12 டன் 350 கிலோ மாம்பழம் மற்றும் 2 டன் 350 கிலோ சாத்துக்குடி ஆகியவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.அழிக்கப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு ரூ.8 லட்சம்.இதையடுத்து ஆய்வின் முடிவில் 12 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

மேலும் படிக்க