• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக பா.ஜ.க. புதிய நிர்வாகிகள் தேர்வு

May 7, 2022 தண்டோரா குழு

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான அறிவிப்பை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

அதன் படி கோவை, ஈரோடு, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்ட உறுப்பினர்களின் விவரங்கள் பின்வருமாறு.

கோவை பா.ஜ.க.வை சேர்ந்த பேராசிரியர் கணகசபாபதி மாநில துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல் கோவை சேர்ந்த ஏ.பி. முருகாணந்தம் மாநில பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூரை சேர்ந்த மலர்கொடி மாநில செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில பொருளாராக எஸ்.ஆர். சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விவசாய அணி மாநில தலைவராக கோவையை சேர்ந்த ஜி.கே. நாகராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில செய்தி தொடர்பாளராக திருப்பூரை சேர்ந்த முன்னாள் எம்.பி. கார்வேந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தேசிய பொதுக்குழு உறுப்பினர்களாக நாடாளுமன்ற தொகுதி வாரிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் படி ஈரோடுக்கு பழனிச்சாமி, திருப்பூருக்கு பாயிண்ட் மணி, நீலகிரிக்கு சண்முகம், கோவைக்கு கர்னல் பாண்டியன், பொள்ளாச்சிக்கு ஜி.கே.எஸ். செல்வக்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாவட்ட பார்வையாளர்களாக ஈரோடு தெற்கு தொகுதிக்கு பாயிண்ட் மணி, ஈரோடு வடக்கு தொகுதிக்கு பழனிச்சாமி, திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மலர்கொடி, திருப்பூர் வடக்கு தொகுதிக்கு ஜி.கே.எஸ். செல்வக்குமார், கோவை நகர் தொகுதிக்கு ஜி.கே. நாகராஜ், கோவை தெற்கு தொகுதிக்கு மோகன் மந்திராசலம், கோவை வடக்கு தொகுதிக்கு பேராசிரியர் கனகசபாபதி, நீலகிரிக்கு நந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க