• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சுவாமி குரு மித்ரேஷிவா உடன் மாதங்கி ஜெயந்தி விழா

May 4, 2022 தண்டோரா குழு

கோவையில் சுவாமி குரு மித்ரேஷிவா உடன் மாதங்கி ஜெயந்தி விழா சங்கீதத்துடன் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அன்னை ராஜ மாதங்கி தேவி இந்த உலகத்தில் அவரித்த நாளே மாதங்கி ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆதிசங்கரர், மகாகவி காளிதாசர்,சங்கீத மும்மூர்த்திகள் போன்ற மகான்களும், கலைத்துறையில் சிறந்து விளங்கும் அனைத்து பிரபலங்களும் அன்னை ராஜ மாதங்கி தேவியை வழிபட்டு அருள் புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் அட்சய திருதியான நாளில் மாதங்கி பவுண்டேசன் சார்பில் அன்னை ராஜ மாதங்கி தேவியின் அருளால் விழிப்படைந்தவர் சுவாமி குரு மித்ரேஷிவா,இவர் தனக்குக் கிடைத்துள்ள ஞான செல்வத்தையும்,அன்னை ராஜமாதங்கி தேவியின் சிறப்பு அம்சங்களையும் உலக மக்களுக்கு உணர்த்தும் விதமாக முதன்முறையாக மாதங்கி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இதில் மாதங்கி தேவிக்கு பிடித்த சங்கீதங்கள் வாசிக்கப்பட்டன. ஜெயந்தி விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க