• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் 3909 பேருக்கு கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது

April 30, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

கொரோனாவால் இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு உச்சநீதிமன்ற வழிக்காட்டுதலின் படி நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 5872 மனுக்கள் பெறப்பட்டு 3909 பேருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 1194 மனுக்கள், இருமுறை பெறப்பட்ட மனு மற்றும் இதர காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின் படி 20.03.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 60 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். 20.03.2022 முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வுகாண வேண்டும்.

இக்காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இம்மனுக்கள் மீது மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க