• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.28.35 லட்சம் பறிமுதல்

April 24, 2022 தண்டோரா குழு

லஞ்சம் பெற்ற புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் கோவை மண்டல போக்குவரத்து இணை ஆணையர் காரிலிருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட ரூபாய் 28 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகே உள்ள பாலசுந்தரம் சாலையில் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் சேர்த்து போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. தற்போது இணை ஆணையராக உமாசக்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர், கோவை, திருப்பூர், உதகை மாவட்டங்களில் உள்ள போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து போக்குவரத்து துறையில் ஓய்வுப்பெற்ற அலுவலக உதவியாளராக இருந்த செல்வராஜ் மூலம் மாதந்தோறும் மாமூலம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி திவ்யா தலைமையிலான 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இணை ஆணையர் உமாசக்தி தொடர்பான சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சௌரிபாளையம் சாலையில் வந்துக்கொண்டிருந்த உமாசக்தி காரை வழிமறித்து சோதனை செய்தபோது, அதில் கணக்கில் காட்டப்படாத பணம் லட்சக்கணக்கில் இருந்தது தெரியவந்தது.பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவரை அண்ணா சிலை அருகிலுள்ள இணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அவருடைய அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, காரில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணும் பணியும் நடைபெற்றது. அதில், ரூபாய் 28 லட்சத்து 35 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. கடந்த வாரம் தொடர் விடுமுறையின்போது இயக்கப்பட்ட தனியார் பேருந்துகளில் அதிக கட்டணங்கள் வசூலிப்பதாக புகார் எழுந்தது.அந்த புகாரின் அடிப்படையில், பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்டன தனியார் பேருந்துகளை விடுவிக்கவும்,மேலும் சில பணிகளுக்காகவும் உமாசக்தி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக அவரது காரை சோதனை செய்து ரூபாய் 28 லட்சத்து 35 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.தொடர்ந்து,இவருக்கு லஞ்ச பெற்றுக்கொடுக்க உதவிய ஓய்வுப்பெற்ற அலுவலக உதவியாளர் செல்வராஜ் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க