• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநகராட்சியில் அடையாள அட்டைகளை புதுப்பித்து தர சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

April 23, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 6 ஆயரத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர். பதிவு பெறாமல் சுமார் 12 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.

கொரோனா சூழ்நிலை காரணமாக சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனிடையே சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும் என ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டது.

இதற்காக மாநகராட்சி சார்பாக முகாம்கள் அமைக்கப்பட்டு ஆவணங்கள் பெறப்பட்டு அதனை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வங்கி கடன்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான முகாம்கள் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்தது. ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் இந்த முகாம்களில் கலந்துக்கொண்டு தங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்பித்தனர்.

இதனிடையே சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்ட அடையாள அட்டை இன்னமும் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் வங்கிகளில் கடன் தரவும் மறுக்கப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி கூறுகையில்,

‘‘சில வங்கிகளில் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை காலவதியாகிவிட்டது புதிய அட்டையுடன் வாருங்கள் என்கின்றனர். மாநகராட்சி சார்பாக புதிய அட்டைகள் இன்னமும் வழங்கப்படவில்லை. எனவே சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அட்டைகள் வழங்கப்பட வேண்டும். கொரோனா கால சிறப்பு கடனை பெற்று தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மண்டல வாரியாக சாலையோர வியாபாரிகள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்த மாநகராட்சி சார்பாக குழு அமைக்கப்பட வேண்டும்’’ என்றார்.

மேலும் படிக்க