• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வால்பாறையில் வேட்டை தடுப்பு காவலர்களை காட்டுயானை துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு

April 21, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் தொகுதிக்கு உட்பட்ட வால்பாறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய்முடி எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த புலி ஒன்றை வனத்துறையினர் வலை வீசிப் பிடித்து வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்தில் கூண்டு வைத்து புலியை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் சந்திரன் மந்திரி மட்டம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வனப்பகுதி விட்டு வெளியே வந்த ஒற்றை காட்டு யானை மூன்றுபேரை துரத்தியது இதில் மூன்று பேரும் திசைமாறி சென்றுள்ளனர். காட்டின் குறுக்கு பகுதியில் சென்ற சந்திரன் மரத்தின் வேர் காலில் பட்டு நெஞ்சில் அடிபட்டது.

சந்திரனை தேடிவந்த நண்பர்கள் சந்திரனை தூக்கிக்கொண்டு வனப்பகுதி விட்டு வெளியே வந்து வால்பாறை அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.காட்டு யானை துரத்தி வேட்டை தடுப்பு காவலர் உயிரிழந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க