• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு விவசாய சங்கத்தினர் வரவேற்பு

April 20, 2022 தண்டோரா குழு

தமிழக அரசின் அறிவிப்பின் படி நீர்நிலைகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க கோவை மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:

தமிழக சட்டமன்ற கூட்ட தொடரில் நீர்நிலைகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். தமிழக அரசின் அறிவிப்பு படி கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடு செய்துள்ளது.இதனை முழுமையாக வரவேற்கிறோம்.

மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் தூர்வாரப்பட வேண்டும். நீர்வழித்தடங்களில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிகளின் வரப்புகளை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க