• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் – மாவட்ட ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை

April 19, 2022 தண்டோரா குழு

வால்பாறையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ் சமீரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த தாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகன் ஹரிஹரன் (23). இவர் வால்பாறையில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.இந்தநிலையில் ஹரிஹரன் 16ம் தேதி பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், முன்னால் சென்ற வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் ஹரிஹரனின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக அவரது குடும்பத்தாரிடம் தெரிவித்தனர்.இதை தொடர்ந்து அவரது தாயார் பழனியம்மாள், ஹரிஹரனின் உடல் உறுப்புகளை தானமாக கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் இளைஞரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார். தொடர்ந்து மூளைச்சாவு அடைந்த இளைஞர், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சிலருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க