• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நவக்கரையில் ரயிலில் அடிபட்டு 3 யானைகள் உயிரிழந்த சம்பவம்- உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு

April 11, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் தமிழ்நாடு-கேரள எல்லையான நவக்கரை பகுதியில் ரயில் பாதையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மங்களூர்-சென்னை விரைவு ரயில் சென்றது போது தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மூன்று காட்டு யானைகள் உயிரிழந்தது.

யானைகள் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் தலைமையில் கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன்,சதீஷ்குமார்இளந்திரையன் ஆகியோர் தலைமையில் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் இன்ஜினில் தண்டவாளத்தில் பயணித்த படி வந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.நவக்கரை பகுதியில் சிறிது நேரம் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து கேரள மாநிலத்தில் உள்ள வாளையார் ரயில் நிலையத்திலும் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில் ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் தொலைக்காட்சி மூலம் யானை வழிப்பாதை மற்றும் ரயில் பாதைகள் ரயில் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், தமிழக கேரள வனத்துறை அதிகாரிகள், மற்றும் ரயில்வே துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் படிக்க