• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்த இளைஞர் உட்பட நான்கு பேர் கைது

April 10, 2022 தண்டோரா குழு

15 வயது பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்திலும்,குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் சிறுமியின் பெற்றோர்,இளைஞரின் தாய் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 15 வயது பழங்குடியின சிறுமி.சிறுமியின் உறவினரான காரமடை கிட்டாம்பாளையத்தை சேர்ந்த லட்சுமணன் மகன் செல்வராஜ்(25) என்பவர் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து அறிந்த செல்வராஜின் தாய் சரஸ்வதி,சிறுமியின் பெற்றோர்களான கருப்பசாமி,சுமித்ரா உள்ளிட்டோர் 15 வயது சிறுமிக்கு கடந்த பிப்ரவரி மாதம் காரமடை மொக்கை நகரில் உள்ள விநாயகர் கோவிலில் ரகசிய திருமணம் செய்து வைத்துள்ளனர். தற்போது இச்சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஊரக நல அலுவலர் தனபாக்கியம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சம்பவம் நடந்தது உண்மை என தெரிய வந்ததை அடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செல்வராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழும்,குழந்தை திருமண தடைச்சட்டத்தின் கீழ் சிறுமியின் பெற்றோர் கருப்பசாமி,சுமித்ரா மற்றும் செல்வராஜின் தாய் சரஸ்வதி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காரமடை காவல் துறையினர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.15 வயது பழங்குடியின சிறுமிக்கு நேர்ந்த சோகம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க