• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜமாத் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக புகார்

March 30, 2022 தண்டோரா குழு

கோவையில் ஜமாத் அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தி அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக இந்து முன்னணியினர் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வரும் 1ம் தேதி அனைத்து ஜமாத் இணைந்து கோவையில் போராட்டம் நடத்தி அதன் வாயிலாக கலவரம் நடத்த முயற்சி நடைபெறுகிறது. அதற்காக பொறுப்பு காவல் ஆணையராக உள்ள மேற்கு மண்டல காவல்துறைத் தலைவரிடம் மனு அளித்துள்ளோம். கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படாமல் உள்ளனர்.

காஸ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிட்ட திரையரங்குகளை முற்றுகையிட முயற்சித்து செய்கின்றனர்.அதனால் தான் காவல்துறை அதிகாரிக்ளிடம் மனு அளித்துள்ளோம். இந்துக்கள் வசிக்கும் பகுதிகளில் குரானை கொடுக்கின்றனர்.இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.இத்தகைய நபர்களை உளவுத்துறையை வைத்து முறையாகக் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார், செய்தி தொடர்பாளர் தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க