• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கூர்நோக்கு இல்லத்தில் தப்பிய சிறுவன் போலீசில் சரண்

March 29, 2022 தண்டோரா குழு

கோவை லட்சுமி மில் சிக்னல் அருகே கூர்நோக்கு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு குற்ற செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டு, அவர்கள் திருந்தி நல்லமுறையில் வாழ தேவையான கவுன்சிலிங் மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த இல்லத்தில் இருந்து அடிக்கடி சிறுவர்கள் தப்பித்து விடும் சம்பவங்கள் நடக்கின்றன. இந்த நிலையில் கடந்த மாதம் 8-ந் தேதி இங்கு அடைக்கப்பட்டிருந்த 3 சிறுவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து அவர்களில் இருவரை திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வைத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.இதில் 17 வயது சிறுவன் மட்டும் கைது செய்யப்படாமல் இருந்தான்.

இந்த நிலையில் மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் சுற்றித்திரிந்த அந்த சிறுவன் நேற்று கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தான். இதையடுத்து போலீசார் அவனை கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

மேலும் படிக்க