• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை குணியமுத்தூர் 87 வது வார்டு பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டசத்து பெட்டகங்கள் வழங்கல்

March 28, 2022 தண்டோரா குழு

கோவை குணியமுத்தூர் 87 வது வார்டு பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டசத்து பெட்டகங்களை துணை மேயர் வெற்றிசெல்வன் வழங்கினார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 87 வது வார்டுக்கு உட்பட்ட குணியமுத்தூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தினை துணை மேயர் வெற்றி செல்வன் துவக்கி வைத்தார்.தொடர்ந்து மாணவ,மாணவிகளின் சிலம்பம் மற்றும் சுருள்வாள் ஆகிய விளையாட்டுகளை பார்வையிட்டார்.

பின்னர்,கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழாவில் பேசிய அவர்,தமிழக முதல்வரின் பெண்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும்,தமிழக முதல்வரின் மகளிர் மேம்பாட்டு திட்டங்கள் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை,நகர் நல அலுவலர் சதீஷ்குமார், மற்றும் குணியமுத்தூர் பகுதி கழக பொறுப்பாளர் லோகு, மாமன்ற உறுப்பினர்கள் உதயநிதி பாபு,செந்தில் குமார், முருகேசன், இளஞ்சேகரன்,சிவசக்தி,சுமதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க