• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

2500 குடும்பங்களுக்கு கல்லறை தோட்டம் வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த மக்கள்!

March 21, 2022 தண்டோரா குழு

கோவையை அடுத்த கோவைப்புதூர் பகுதியில் சிறுபான்மை மக்களான கிறிஸ்த்துவர்கள் 2500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பாதிரியார் வின்சென்ட் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தினர்.

அப்போது பேசிய அவர்கள்,

தங்கள் பகுதியில் கிறிஸ்தவ மக்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்கள் அதிகமாக இருப்பதாகவும் ஆனால் மக்களுக்கு ஏற்ப கல்லறை தோட்டம் வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து கல்லறை தோட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் உள்ளதாகவும் இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் கிறிஸ்தவ மக்கள் பயன்பாட்டிற்காக கல்லறை தோட்டத்திற்கு என இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் படிக்க