• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

March 19, 2022 தண்டோரா குழு

கோவை கருமத்தம்பட்டி பகுதியில் வசிப்பவர் ஜெபமாலை ராஜ்.இவர் கூலிக்கு விசைத்தறி ஓட்டும் வேலை செய்து வருகிறார்.இவரது மகள் பிரசன்னா ஜெபமாலை ராஜ் என்பவர் தற்போது தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை சோமனூர் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழே நின்றுகொண்டு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தனது தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டு இருந்துள்ளார்.இது அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர்.அப்போது அவ்வழியாக வந்த ரயில் முன்பாக திடீரென பிரசன்னா ஜெபமாலை ராஜ் நின்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதில் அவரது உடல் இரு துண்டுகளாக்கி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்று தற்போது போத்தனூர் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க