• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை நரசிபுரம் வனப்பகுதியில் இறந்த பெண் யானையின் மண்டை ஓடு, எழும்புகள் கண்டுபிடிப்பு

March 17, 2022 தண்டோரா குழு

கோவை பேளூவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட நரசிபுரம் வனப்பகுதியில் வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது கடுக்காய்பாறை அருகே சென்ற போது இறந்த யானையின் மட்டை ஓடு, மற்றும் எழும்புகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் மற்றும் கால்நடை மருத்துவர் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த முதுமலை வன கால்நடை உதவி மருத்துவர் ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

அதில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு கோரை பற்களை மண்டை ஓடு எழும்புடன் பொருத்தி பார்த்து ஆய்வு செய்ததில், இறந்தது சுமார் 7 வயது மதிக்கத்தக்க பெண் யாணை என்பது கண்டறியபட்டது. இதையடுத்து அங்கிருந்த எழும்புகள் மரபனு சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க