• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமணத்திற்கான அனைத்து தேவைகளை பூர்த்தி செய்ய கோவையில் ஏப்ரல் 16ம் தேதி திருமண கண்காட்சி !

March 14, 2022 தண்டோரா குழு

டபிள்யூ எப் எப் அமைப்பின் சார்பில் வரும், ஏப்ரல் 16 ம் தேதி மிகபெரிய அளவில், திருமணம் சார்ந்த கண்காட்சி, கோவையில் நடைபெற உள்ளது.இதில் திருமண தொடக்க நிகழ்வான பெண் பார்க்கும் படலத்தில் இருந்து, திருமணம் நிறைவு பெற்று, மறு வீடு செல்லும் வரையில், இரு வீட்டாருக்கும் தேவையான அனைத்து பூர்த்தி செய்துதரப்படும்.

அனைவரும் ஒரே மேற்கூறையில் சங்கமிக்க உள்ளதாக,கோவை அவினாசி சாலை, நீலாம்பூர் பகுதியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெற்ற,துவக்கவிழாவின் போது தெரிவித்தனர்.மேலும் இந்த துவக்க விழா நிகழ்ச்சியில்,பல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் காயத்ரி,நடராஜன்,குழந்தை நல மயக்க மருந்து நிபுணர் மற்றும் Ecorganic Boutique Resorts & Experiences சங்கிலியின் நிறுவனர் மருத்துவர் தினேஷ் குமார் குணசேகரன்,கலர் பெண்சில் டெக்கரேஷன் அமைப்பின் நிறுவனர் தாமு, லெஷ்கின் கிளினிக் நிறுவனர் கவிதா, சென்னை பர்ன் & ஃபேன் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் எத்திராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, குத்து விழக்கேற்றி,டபிள்யூ எப் எப் திருமண கண்காட்சி லோகோ வெளியிட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

மேலும் இந்த நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினேஷ் மற்றும் பிரிட்டோ ஆகியோர் கூறுகையில்,

WFF தமிழ்நாட்டின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நகைகளுடன் கூடிய நமது பட்டுப் புடவைகள் நீண்ட காலமாக உலகம் முழுவதும் பெருமை சேர்க்கின்றன. நமது காஞ்சிபுரம் பட்டு, ராம்நாடு பருத்தி மற்றும் செட்டிநாடு புடவைகள், குறிப்பாக, நெசவாளர் மற்றும் திறமைக்கு பெயர் பெற்றவை.

நெசவாளர்கள் அதிகம் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.இறுதியாக, தமிழ்நாட்டின் மரபுகள் மற்றும் நெசவுகளைப் பாதுகாத்து அவற்றை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்வதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்கிறோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.கோவையில் உள்ள லீ மெரிடியன் உணவகத்தில் ஏப்ரல் 16 ம் தேதி நடைபெறும் இந்த கண்காட்சியில்,ஒரு திருமணத்திற்கு தேவையான அனைத்து நிறுவன அமைப்பினரும், இங்கு கண்காட்சியில் இடம் பெற உள்ளனர்.

மேலும் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதில் வெற்றி பெறும் அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தனர், மேலும் இந்த கண்காட்சி கோவையில் முதன் முறையாக நடத்த உள்ளதாகவும், இதில் திருமணத்திற்கு தேவையான, பட்டு புடவைகள் முதல் போட்டோ & வீடியோ, பந்தல் அலங்காரம், , புட்ஸ் , எக்ஸ்போ,ஆடை அலங்கார அணிவகுப்பு, மேட்ரிமோனி சந்திப்பு என அனைத்து தேவைகளுக்கும் இங்கு அவர்களின் சேவைகளை பெற முடியும் என தெரிவித்தார்.

கோவை மக்கள் இதனை மிக பெரிய அளவில் வெற்றி பெற செய்ய வைப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், கோவையை தொடர்ந்து சென்னை , பெங்களூரு என பல்வேறு முக்கிய நகரங்களில் வெட்டிங் எக்ஸ்போ நடத்த திட்டமிட்டுள்ளோம் தெரிவித்தனர்.

மேலும் படிக்க