• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஓட்டலை சரியாக நடத்தாத உறவினருக்கு அரிவாள் வெட்டு – இருவர் கைது

March 12, 2022 தண்டோரா குழு

கோவை தொண்டாமுத்தூர் அருள் ஜோதி நகர் பகுதியில் குடியிருப்பவர்கள் ராஜசேகர் (42). கேட்டரிங் மாஸ்டர் தொழில் செய்து வருகிறார். இவருடன் ஜெகதீஷ் (32) மற்றும் பிரகாஷ் என்பவர் வேலை செய்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொண்டாமுத்தூர் போளுவம்பட்டி பிரிவு அருகில் ஒரு ஹோட்டலை ராஜசேகர் லீசுக்கு எடுத்துள்ளார்.கேட்டரிங் ஆர்டர் அதிகமாக வருவதால் அடிக்கடி வெளி ஊர்களுக்கு செல்வது வழக்கம்.கடையைப் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால், தனது உறவினரும் உடன் வேலை செய்யும் ஜெகதீசன் கடையைப் பார்த்துக் கொள்ளும்படி கூறியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக கடையில் ஜெகதீஸ் வேலை செய்யாமல் குடிபோதையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தகறாறு செய்து சரியாக கடையை நடத்தவில்லை என தெரியவந்துள்ளது.ராஜசேகர் மற்றும் பிரகாஷ் இருவரும் நேற்று காலை இது சம்பந்தமாக ஜெகதீசனிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் மீண்டும் மாலை ஜெகதீஸ் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சமாதானப்படுத்தி அக்கம்பக்கத்தில் அனுப்பி வைத்தனர். ஜெகதீசன் மாலை ஐந்து முப்பது மணி அளவில் நரசிபுரம் ரோடு குபேரபுரி டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்து உள்ளார். அங்கு சென்ற பிரகாஷ் மற்றும் ராஜசேகர் மீண்டும் ஜெகதீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பிரகாஷ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஜெகதீசன் வலது கை ,இடது கால், வயிறு உள்ளிட்ட மூன்று இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

அங்கு மது குடித்துக் கொண்டிருந்த சிலர் பார்த்து பதறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனடியாக பாரில் வேலை செய்பவர்கள் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொண்டாமுத்தூர் போலீசார் ஜெகதீசன் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஜெகதீசன் தாயார் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ் ராஜசேகர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க