• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் பாஜக வினர் கொண்டாட்டம்

March 10, 2022 தண்டோரா குழு

பாஜக வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் பாஜக வினர் கொண்டாடினர்.

இன்று பஞ்சாப், உத்திரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை பிடித்தது.

இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபடியான் இடங்களை வென்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக கோவை பாஜக சார்பில் சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாவட்ட அலுவலகம் முன் பாஜக வினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். பாஜக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் ஏபி முருகானந்தம் தலைமையில் இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

பொதுமக்களிடம் பாஜக வெற்றியை தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு வெற்றியை கொண்டாடினர்.

மேலும் படிக்க