தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 129 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று எண்ணிக்கை 34,51,598 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களில் 2 பேர் உயிரிழந்தனர்.இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38,023 ஆக உள்ளது.அதேசமயம் இன்று மட்டும் 354 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,11,899 ஆக அதிகரித்தது.
தமிழகத்தில் இன்று 42,026 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.இதுவரை 6,48,79,171 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு