• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜி.என்.மில்ஸ் மேம்பால பணிகளில் அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்த திட்டம்

March 10, 2022 தண்டோரா குழு

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இதனை அடுத்து தற்போது ஜி.என். மில்ஸ் மேம்பால பணிகள் தீவிரமடைந்துள்ளன.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஜி.என். மில்ஸ் சந்திப்பில் சுமார் 670 மீட்டர் நீளத்தில் சுமார் 15 தூண்களுடன் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘ஜி.என்.மில்ஸ் மேம்பால பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதிநவீன தொழில்நுட்பம் மூலம் கான்கிரிட் போடும் பணி, பில்லர்கள் மேல் சாலை அமைக்கும் பணி போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.

மேலும் படிக்க