• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

March 10, 2022 தண்டோரா குழு

இந்திய மாதர் தேசிய சம்மேளனம், கோவை மாநகர் மேற்கு மண்டலம் சார்பாக 41வது வார்டு கவுன்சிலர் சாந்தி சந்திரன் தலைமையில் சர்வதேச உழைக்கும் மகளிர் தினக்கூட்டம் பி.என்.புதூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் மாநகர் மேற்கு மண்டல குழு செயலாளர் ஜேம்ஸ் இக்கூட்டத்தை துவக்கி வைத்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜேம்ஸ் கூறியதாவது:

உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு செய்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது. கோகுலம்காலனி நகர் மையம் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

அனைத்து துறைகளிலும் பணிபுரியும் பெண்களுக்கு, ஆண்களுக்கு நிகராக ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

நிகழ்ச்சியில், மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நந்தினி, மாவட்ட செயலாளர் சுமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க