• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் பணியாளர்களுடன் இணைந்து மரக் கன்றுகளை நட்ட அதிகாரிகள்

March 8, 2022 தண்டோரா குழு

மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர்,காவல் ஆணையாளர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் பணியாளர்களுடன் இணைந்து மரக் கன்றுகளை நட்டனர்.

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் பணியாளர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் சமீரன்,மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா,மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நகரத்தினம்,வருவாய் அலுவலர் லீலா அலக்ஸ் ஆகியோர் ஆட்சியர் அலுவலக வளாத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வில்வமரம், மகிழமரம் உட்பட 5 வகை மரக்கன்றுகள் நடப்பட்டது.இதில் மாவடட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் 50க்கும் மேற்ப்பட்ட மகளிர் பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாவடட் ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர்,காவல் ஆணையர், காவல் கண்காணிப்பாளர் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மகளிர் தினத்தில் மரக்கன்று நடும் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டது மகிழ்ச்சியளிப்பதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க