• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பெண் காவலர்களுடன் இணைந்து மகளிர் தினம் கொண்டாடிய கோவை காவல் ஆணையர் !

March 8, 2022 தண்டோரா குழு

கோவையில் பெண் காவலர்களுடன் இணைந்து மகளிர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய காவல் ஆணையர், வெயிலில் பணிபுரியும் காவலர்களுக்கு பழச்சாறுகள் வழங்கினார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பெண்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை அண்ணா சிலை சிக்னல் பகுதியில் கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீகுமார் பெண் போலீசாருடன் இணைந்து கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடினார்.

தொடர்ந்து போலீசாருக்கு இனிப்புகளை வழங்கி மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், தற்போது கோடைகாலம் துவங்கியுள்ள சூழலில், வெயிலில் நின்று பணி புரியும் போக்குவரத்து காவலர்களுக்கு பழச்சாறு, நீர்மோர் ஆகியவற்ற வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சிகளில் துணை ஆணையர்கள் உமா, செந்தில்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க