சுவாமி : வைத்தமாநிதிப்பெருமாள்.
அம்பாள் : குமுதவல்லி, கோளூர்வல்லி.
தீர்த்தம் : குபேரதீர்த்தம், தாமிரபரணி நதி.
விமானம் : ஸ்ரீகர விமானம்.
தல வரலாறு :
குபேரன் ஒரு முறை சிவனை வழிபட கைலாயம் சென்றான். அங்கே உமையவள் சிவனுடன் இருக்க இவனது கண்கள் உமையவளை கெட்ட நோக்கத்தோடு பார்க்க, இதனால் கோபம் கொண்ட பார்வதி குபேரனை சபித்தாள். அதனால் அவனிடம் இருந்த நவநிதிகளும் அகன்று உருவம் விகாரமானது. நவநிதிகளும் தவமிருந்து இவ்வூர் பெருமாளை அடைக்கலம் கொண்டதால் வைத்தமாநிதி பெருமாள் (நிதிகளை வைத்திருபவர்) என அழைக்கப்படுகின்றார்.
குபேரன் தன் தவறை உணர்ந்து சிவன் பாதம் பணிய அவர் பார்வதியிடம் மன்னிப்பு கேட்குமாறு கூற, இவன் பார்வதியை அடிபணிய அவள் இனி உனக்கு ஒரு கண் தெரியாது, உடல் விகாரம் மாறாது, இழந்த நிதிகளை அவை தஞ்சம் அடைந்துள்ள வைத்த மாநிதி பெருமாளிடம் தவம் செய்து பெற்றுக் கொள் என்று கூறினாள்.
அவனும் இவ்வூர் பெருமாளை நோக்கி கடுந்தவம் செய்து பாதி நிதியை பெற்றான். திரும்ப பெற்ற செல்வங்களை ஓரிடத்தில் நிலையாக நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் தன்மையுடன் இலக்குமி தேவிக்கு கொடுத்தான். நிலையான செல்வம் இருக்கும் இடத்தில் அதர்மம் ஆட்சி புரியும் தர்மம் இருக்காது. ஆகவே செல்வம் ஒருவரிடம் நிலையாக இல்லாமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது பெருமாள் கிருபை.
தர்மம் நிரந்தரமாகவே இங்கே தங்கி பெருமாளை வழிபட்டு வருகின்றதாம். வியாச வம்சத்தில் வந்த தர்மகுப்தன் என்பவர் 10 குழந்தைகளுடன் தரித்திரனாகி, வறுமையில் மிகவும் கஷ்டப்பட பரத்வாஜ முனிவரின் ஆலோசனையின்படி இங்கு வந்து பணிவிடை செய்து பெருஞ்செல்வத்திற்கு அதிபதியாக சுகவாழ்வு பெற்றான்.
இப்பெருமாள் மரக்கால் (அளக்கப் பயன்படுத்தும் அளவு) சயனத்தில் உள்ளார். இடது கையை உயர்த்தி இன்னும் வேறு எங்கு செல்வம் உள்ளது என மையிட்டு பார்க்கிறார். இங்கு வசித்த விஷ்ணுநேசர் என்பவருக்கு மகனாக அவதரித்தவர் தான் “மதுரகவியாழ்வார்”. இழந்த செல்வங்களை இப்பெருமானை வேண்டி வழிபட்டால் திரும்ப கிடைக்கும் என்று பிரம்மாண்ட புராணம் கூறுகிறது.
நடைதிறப்பு :
காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.
கோயில் முகவரி : அருள்மிகு வைத்தமாநிதிப்பெருமாள் திருக்கோவில்,திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்