• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு சோமேஸ்வர சுவாமி திருக்கோவில்

February 25, 2017 findmytemple.com

சுவாமி : அருள்மிகு சோமேஸ்வரர், சிக்கேசர், சோமநாதர்.

அம்பாள் : அருள்மிகு சோமசுந்தரி, தேனார் மொழியாள்.

மூர்த்தி : மாலீஸ்வரர், கல்யாண சுந்தர விநாயகர், வள்ளி தெய்வானை, உடனாய ஆறுமுகர், கஜலட்சுமி, நடராசர்.

தீர்த்தம் : சோம தீர்த்தம்.

தலச்சிறப்பு :

மகா சங்கார காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்ட தலம் காரோணம் எனப்படும். இத்தல அம்பிகை இறைவன் திருமேனியை ஆரோகணித்ததால் இத்தலம் இப்பெயர் பெற்றது. அமுத கலசம் வைத்திருந்த உறி சிவலிங்கமான தலம்( சிக்கம் உறி) ஆதலால் சிக்கேசம் என்றும் பெயர். மகாமகத்தில் சோமேஸ்வரரும் எழுந்தருளி இருக்கிறார்.

தல வரலாறு :

இக்கோவில் கிபி 13 நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சோழர்கள் கால கட்டட கால கலையை ஒத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. இக்கோவில் சாரங்கபாணி கோவிலுக்கு தெற்கே உள்ளது. இக்கோவிலில் சோமேஸ்வரரை விட முருகனையே சிறப்பாக கருதுகிறார்கள். ஏனெனில் முருகன் காலில் காலணி அணிந்திருப்பதாக கூறப்படுகிறது.

வழிபட்டோர் : வியாழன், சந்திரன், இராமர்.

பாடியோர் : திருஞானசம்பந்தர்.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

பூஜை விவரம் : ஐந்து கால பூஜை.

திருவிழாக்கள் : சிவராத்திரி, நவராத்திரி, மாசி மகம்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு சோமேஸ்வர சுவாமி திருக்கோவில்,கும்பகோணம் அஞ்சல், தஞ்சை மாவட்டம் – 612 001.

மேலும் படிக்க