• Download mobile app
24 May 2026, SundayEdition - 3756
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் இங்கிலாந்து பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்; மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை அறிவிப்பு!

February 6, 2026 தண்டோரா குழு

அடுத்த நூற்றாண்டின் உலகத் தலைவர்கள் இந்தியாவில் இருந்தே உருவாவார்கள்,” என்று இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தின் (University of Reading) சர்வதேச துணைவேந்தர் டாக்டர் கரோலின் பெய்லன் கோவையில் தெரிவித்தார்.

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகம் இணைந்து,”காலநிலை மாற்றம் மற்றும் எதிர்காலத் தலைவர்களுக்கான சர்வதேச உச்சி மாநாட்டை” (International Summit on Young Leaders for a Climate Smart Future) நடத்தின.

புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU): இவ்விழாவில், கல்வி,ஆராய்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்திற்கான புதிய கண்டுபிடிப்புகளில் இணைந்து செயல்பட, இரு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் மற்றும் ரீடிங் பல்கலைக்கழகத்தின் சர்வதேச துணைவேந்தர் டாக்டர் கரோலின் பெய்லன் ஆகியோர் ஒப்பந்தங்களைப் பரிமாறிக் கொண்டனர்.ரீடிங் பல்கலைக்கழகத்தின் 100-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் ஸ்காலர்ஷிப்: விழாவில் சிறப்புரையாற்றிய டாக்டர் கரோலின் பெய்லன், குமரகுரு மாணவர்களுக்கான நான்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இங்கிலாந்தில் ஒரு வருடம் வரை தங்கிப் படிப்பதற்கான மாணவர் பரிமாற்றத் திட்டம் (Student Exchange Program).
இங்கிலாந்து, மலேசியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள ரீடிங் பல்கலைக்கழக வளாகங்களில் கோடைக்காலப் பயிற்சிகள் (Summer Schools). முதுகலை பட்டப்படிப்புகளுக்கான (master’s degree) விரைவான சேர்க்கை நடைமுறை. ரீடிங் பல்கலைக்கழகத்தில் சேரும் குமரகுரு மாணவர்களுக்கு £10,000 (சுமார் ரூ.10 லட்சம்) வரை கல்வி உதவித்தொகை (Scholarships).

பூமியை நாம் காப்பாற்றத் தேவையில்லை; மனித குலத்தைத்தான் காப்பாற்ற வேண்டும். அதற்குச் சூழலியல் சார்ந்த புதிய சிந்தனைகள் அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.

தலைமையுரையாற்றிய குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர்,’யங் இந்தியா கிளைமேட் ஆக்சன் நெட்வொர்க்’ (Y-I CAN) என்ற புதிய அமைப்பைத் தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில், “வளர்ந்த நாடுகள் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை அப்படியே பின்பற்றாமல், இந்தியாவின் சூழலுக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றிமைத்து (Reverse Engineering) பயன்படுத்த வேண்டும். இயற்கை வளங்களை அழிக்காத வளர்ச்சிப் பாதையே இந்தியாவுக்குத் தேவை,” என்றார்.

இங்கிலாந்தின் ஹென்லி பிசினஸ் ஸ்கூல் டீன், பேராசிரியர் எலினா ஸ்பசோவா பேசுகையில்,

“காலநிலை மாற்றம் என்பது வெறும் அறிவியல் பிரச்சனை அல்ல; அது ஒரு தலைமைத்துவப் பிரச்சனை.லாபமும், சுற்றுச்சூழலும் எதிரெதிர் துருவங்கள் அல்ல; அவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டியவை,” என்று குறிப்பிட்டார்.

Y-I CAN முன்னெடுப்பு: புதிதாகத் தொடங்கப்பட்ட Y-I CAN அமைப்பானது, கோவை மற்றும் நீலகிரியில் உள்ள 15-க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஒன்றிணைத்துச் செயல்படும்.இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் குழுக்கள், சுற்றுச்சூழல் சார்ந்த புதிய திட்டங்களைச் செயல்படுத்துவர். இதில் வெற்றி பெறும் மாணவர் குழுவிற்கு, இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பு முழு நிதியுதவியுடன் வழங்கப்படும்.

முன்னதாக,குமரகுரு குளோபல் என்கேஜ்மென்ட் அலுவலகத்தின் இயக்குனர் டாக்டர் விஜிலா எட்வின் கென்னடி வரவேற்புரை வழங்கினார்.

மேலும் படிக்க