சுவாமி:பிரளயகாலேஸ்வரர்.
அம்பாள்:அழகிய காதலி (ஆமோதனம்பாள்,கடந்தை நாயகி),மகாலட்சுமி, சண்டிகேஸ்வரி.
தீர்த்தம்:பார்வதி தீர்த்தம்,கயிலை தீர்த்தம்,இந்திர தீர்த்தம்,முக்குளம்,வெள்ளாறு.
மூர்த்தி:சௌந்தரேஸ்வரர்,மெய்கண்டார்,கலிக்கம்ப நாயனார்,தண்டபாணி உருவங்கள்,கோடிவிநாயகர்,சோமாஸ்கந்தர்,விசுவேஸ்வரர்,முருகன்,சண்டேஸ்வரர்.
தலவிருட்சம்:செண்பக மரம்.
தலச்சிறப்பு:எங்கும் இல்லாத சிறப்பாக இத்தலத்தில் உள்ள நந்தி ஊரை நோக்கி (சிவனுக்கு எதிராக) திரும்பி இருக்கிறது.இக்கோயிலுக்குத் ‘தூங்கானைமாடம்'(கஜப் பிரஷ்டம்) என்பது பெயர்.சம்பந்தர்,அப்பர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.ராஜகோபுரம் 5 நிலைகளை கொண்டது.
கோயிலின் முன் வாயிலில் தென்பகுதியில் குடவரை விநாயகரைத் தரிசிக்கலாம்.மதிலையடுத்து உள்ளே நந்தவனம் உள்ளது.வடபகுதியில் 30 அடி உயரமுள்ள அழகான துவஜஸ்தம்பம்,பக்கத்தில் கிழக்கு நோக்கிய பிரதோஷ நந்தி சந்நிதி உள்ளது.உள்ளே நுழைந்தால் பதினாறுகால் மண்டபம். மூலவரின் கர்ப்பக் கிருகத்தின் விமானம் ஐராவதம் வழிபட்டதற்கு அடையாளமாக யானை நிற்பது போல் அமைந்துள்ளது.மூலலிங்கம் சுயம்பு,சற்று உயரமானது,ஆவுடையார் சதுர வடிவானது. கர்ப்பக்கிருகத்தின் முன்வாயில் தவிர,ஏனைய மூன்று புறங்களிலும் இறைவனைக் கண்டு வணங்குமாறு சன்னல்கள் பலகணிகள் அமைந்திருப்பது சிறப்புடையது.சுற்றுப்பகுதியில் உற்சவத் திருமேனிகள் காட்சியளிக்கின்றன.
கோயில் முகவரி:அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் கோவில்,பெண்ணாடம் – 606 105, கடலூர் மாவட்டம்.
சிறுமுகை பகுதியில் திருட்டு நடைபெறுவதை தடுத்த காவலர்களுக்கு கோவை எஸ்.பி பாராட்டு
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 41 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
கோவை உப்பிலிபாளையத்தில் கேலக்ஸி ஹெல்த் எஜுகேஷன் அக்குபஞ்சர் யோகா கிளினிக் பட்டமளிப்பு விழா
கோவையில் மே 28 முதல் துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள்
கனடாவில் சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’ வழங்கப்பட்டது
கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் 1995ம் ஆண்டு பேட்ஜ் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திப்பு