• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோவில்

November 1, 2018 findmytemplae.com

சுவாமி : அருள்மிகு நாகேஸ்வரர்.

அம்பாள் : அருள்மிகு பெரியநாயகி.

மூர்த்தி : சூரியன், நாகராஜன், பிரளயாகலருத்ரர், வலஞ்சுழி விநாயகர், அய்யனார், விஷ்ணு துர்க்கை, பிரம்மா, ஆடிப்பூர அம்மன், முருகன்.

தீர்த்தம் : நாக தீர்த்தம்.

தலவிருட்சம் : வில்வம் மரம்.

தலச்சிறப்பு :

இக்கோவிலின் மூல லிங்கத்தில் சூரியனது கதிர்கள் சித்திரை மாதத்தில் 11, 12, 13 தேதிகளில் விழும்படியாகக் கருவறை கட்டப்பட்டுள்ளது. நாகேஸ்வர சுவாமி கோவிலின் சிறப்புமிக்க அம்சம், இங்குள்ள நடராசர் சந்நிதி முன்னுள்ள மண்டபம் ஆகும். இம்மண்டபத்தின் இரு பக்கங்களிலும் பெரிய கல் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 குதிரைகள், யானைகள், பாகர்களுடன் ஸ்ரீ நடராசர் இம்மண்டபத்தை இழுத்துச் செல்வதுபோல் காட்சியளிக்கிறது. தேரின் அமைப்பைக் கொண்டுள்ள இம்மண்டபம் ஒரு உயரிய கலைப்படைப்பு ஆகும்.

தல வரலாறு :

கும்பகோணத்திலுள்ள கோவில்களில் மிகவும் பழமையானதாகக் கருதப்படுவது நாகேஸ்வர சுவாமி கோவிலாகும். “குடந்தைக் கீழ்க்கோட்டம்” என இது குறிப்பிடப்படுகிறது. குடந்தை கீழ்கோட்டம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட திருக்கோவில். இத்திருக்கோவிலில் 40 கல்வெட்டுகள் உள்ளன. தென்காசி திருக்கோவிலை கட்டிய பராக்கிரம பாண்டியன்(கிபி 1411-1463) ஒரு கல்வெட்டு அமைத்துள்ளான். இந்த நூற்றாண்டில் பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் என்னும் மகான், தம் கழுத்தில் பித்தளை சொம்பு (உண்டியல்) கட்டிக்கொண்டு பிச்சை எடுப்பது போல் சிறுக சிறுக பொருள் சேர்த்து, புதர் மண்டிக் கிடந்த இத்திருக்கோவிலை திருப்பணி செய்து 1923 ஆம் ஆண்டு கும்பாபிஷகம் செய்து வைத்தார்கள்.

வழிபட்டோர் : நாகராஜன், சூரியன்.

பாடியோர் : திருநாவுக்கரசர்.

நடைதிறப்பு : காலை 6.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல்இரவு 9 மணி வரை.

பூஜை விவரம் : ஆறு கால பூஜை.

திருவிழாக்கள் :

சித்திரை – அமுது படைத்தல்,

வைகாசி – விசாகம் – பால் அபிஷேகம்,

ஆனி – நடராஜருக்கு திருமஞ்சனம்,

ஆவணி – விநாயகர் சதுர்த்தி,

புரட்டாசி – நவராத்திரி,

ஐப்பசி – கந்த சஷ்டி,

அன்னாபிஷேகம்,

கார்த்திகைசோமவாரம்,

மார்கழி – திருவாதிரை,

தை – பூசம்,

மாசி – மகம்,

பங்குனி – உத்திரம்.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோவில்,கும்பகோணம் அஞ்சல், தஞ்சை மாவட்டம் – 612 001.

மேலும் படிக்க