• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

April 28, 2017 findmytemple.com

சுவாமி : ஸ்ரீ சுந்தரேஸ்வரர்.

அம்பாள் : ஸ்ரீ மீனாட்சி தேவி.

மூர்த்தி : பத்மநாபப் பெருமாள், தட்சிணாமூர்த்தி.

தீர்த்தம் : அனந்த தீர்த்தம்.

தலச்சிறப்பு :

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள தட்சிணாமூர்த்தி மிகவும் சக்திவாய்ந்தவராக கருதப்படுகிறார். வட பிரகாரத்தில் பத்மநாபப் பெருமாள், மகாலக்ஷ்மி சன்னதி உள்ளது. இத்தலத்தில் உள்ள கிணறு “அனந்த தீர்த்தம்” என்றும் ஆதிசேஷன், பெருமாளின் தாகத்தை தணிப்பதற்காக ஏற்படுத்திய தீர்த்தம் ஆகும். ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி அன்று இந்த தீர்தத்தை தலையில் தெளித்து கொண்டால் சர்வ பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை.

சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் புராணம் இத்தலத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவிளையாடல் என்று தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. பிரமராயன் என்ற பெயர், மாணிக்கவாசகரின் பட்ட பெயரான “தென்னவன் பிரமராயன்” என்று கருதப்படுறது.

தல வரலாறு :

தலபுராணம் “செந்தலை”யை ஒரு கந்தர்வப் பெண்ணாகக் குறிப்பிடுகிறது. “கணிவர்” என்ற முனிவரின் தவத்தைக் கலைத்ததால் அவருடைய சாபத்திற்கு ஆளாகி, பூமியில் ஓர் அழகிய பெண்ணாகப் பிறந்தாள். சாபம் நீங்க பிர்மாரண்யம் என்ற இத்தலத்தை அடைந்து கடும் தவம் புரிந்தாள். சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்தார். அப்பொழுது செந்தலை இந்த ஊர் என் பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்றும் தனக்கு அருள் கிடைத்த மாசி மாத சுக்லபட்ச சப்தமியில் காவிரி நதியில் நீராடி இத்தலத்தில் கோவில் கொண்டு இருக்கும் சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு நற்கதியடைய வேண்டும் என்றும் சிவபெருமானிடம் வேண்டினாள். பிரம்மதேவன் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு மேன்மை அடைந்ததால் கிருதயுகத்தில் இத்தலத்திற்கு “பிர்மாரண்யம்” என்ற பெயர் வழங்கப்பட்டது.

வழிபட்டோர் : செந்தலை.

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : தஞ்சாவூர்.

மேலும் படிக்க