• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அறுபத்து மூவர் திருக்கோவில்

September 21, 2018 findmytemple.com

சுவாமி : அறுபத்து மூவர் நாயன்மார்கள்.

தலச்சிறப்பு :

சிவனை பற்றி பாடல்களை பாடும் அறுபத்து மூவர் நாயன்மார்களுக்காக உருவாக்கப்பட்ட கோவில் இது. அறுபத்து மூன்று நாயன்மார்களின் அவதாரத் தலங்களில் இன்றைய தமிழக எல்லையில் உள்ளவை 58 தலங்கள். மற்றவை காரைக்காலில் ஒன்று, ஆந்திராவில் ஒன்று, கன்னடத்தில் ஒன்று, கேரளத்தில் இரண்டுமாக அமைந்துள்ளன.

மன்னர்கள் காலத்திலேயே 29 நாயன்மார்களுக்கு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றுள் பெரும்பாலானவை பழுதுபட்டும் பராமரிப்பு இன்றியும் காணப்படுகின்றன. திருக்கோவில் முற்றிலும் இல்லாமல் இருப்பவை தமிழக எல் லையில் மட்டும் 29 அவதாரத் தலங்கள்.

தல வரலாறு :

நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்திரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு பேருடன் சுந்தமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுபிரகாரத்திற்குள் கற் சிலைகள் வைக்கப்படுகின்றன. அத்துடன் அறுபத்து மூவரின் உலோகசிலைகளும் ஊர்வலத்தின் பொழுது எடுத்துச் செல்லப்படுகின்றன. நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தராலும், திருமுறைகள் 4,5,6 திருநாவுக்கரசராலும், 7ஆம் திருமுறை சுந்தரராலும் ஆக்கப்பட்ட பண்ணோடு அமைந்த இசைப்பாடல்களாகும். நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அறுபத்து மூவர் திருக்கோவில்,திருவாய்ப்பாடி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க