சுவாமி:அகஸ்தீஸ்வரர் சுவாமி.
அம்பாள்:அகிலாண்டேஸ்வரி(கருவளர்த்த நாயகி).
தலச்சிறப்பு:குழந்தை பேறு வேண்டுபவர்கள் இக்கோவிலில் வழிபடலாம்.இங்குள்ள அம்மனை கருவளர்த்த நாயகி என்று மற்றொரு பெயரும் உண்டு.இத்தலத்தில்,காகபுஜண்டர் யாகக்குழுவினர்,உலகநன்மைக்காக காகபுஜண்டர் ஜீவநாடியில் அருளியபடி,இத்தலத்தில் லோபமுத்ராதேவிக்கும் அகஸ்திய மாமுனிவருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு நடந்த வேள்வியில்,கர்நாடகாவில் உள்ள தலைக்காவிரி காவிரி உற்பத்தியாகும் இடத்தில்,வெள்ள உபாதைகளை கருதி கிழக்கு முகமாக இருந்த நந்தியை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்துள்ளனர்.இதனால் இருமாநிலத்திற்கும் பஞ்சம் ஏற்பட காரணமாயிற்று.மீண்டும் காவிரியில் தேவையான நீர் கிடைக்கவும்,இரண்டு மாநிலங்களும் செழிப்புடன் திகழவும் யாகம் செய்து,மீண்டும் பழையபடி நந்திபெருமானை கிழக்கு முகமாக பிரதிஷ்டை செய்ய வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டுள்ளது.சிறப்பு யாகவேள்வியின் போது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அருகிலுள்ள நகரம்:கும்பகோணம்.
கோயில் முகவரி:அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி,
கருவளர்ச்சேரி கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு