• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி(சனீஸ்வரபகவான்)

August 8, 2019 findmytemple.com

சுவாமி : தர்ப்பாரண்யேஸ்வரர்.

அம்பாள் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்.

தீர்த்தம் : நள தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், வாணி தீர்த்தம்.

தலவிருட்சம் : தர்ப்பை.

தலச்சிறப்பு : சனி பார்வையில் உள்ள பக்தர்கள் இத்தலத்திற்கு சென்று எள்ளுடன் கூடிய தீபம் ஏற்றி அன்னதானம் செய்தால் சனிபகவான் அருள் பரிபூரணமாக கிட்டும். இத்தலத்தில் பூஜைசெய்து மேன்மை பெற்ற நளமன்னரால் திருநள்ளாறு என்ற பெயரைக் கொண்டு சிறப்புடன் விளங்குகிறது. தோஷ நிவர்த்தி தரும் பரிகார தலம்.

தல வரலாறு : நிடத நாட்டு மன்னன் நளனும் சேதி நாட்டு இளவரசி தமயந்தி இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி மணம் புரிந்து கொண்டனர். ஆனால் தேவர்கள் தமயந்தியை மணம் புரிய விரும்பினர். ஆகவே இந்த திருமணத்திற்கு பிறகு, நளன் மீது பொறாமையும் கோபமும், கொண்டு, சனிபகவானை இதற்கு உதவி புரிய வேண்டினர்.

ஆனால் சனிபகவான், இவர்களது தூய்மையான அன்பை அறிந்து, நளனின் உண்மையான அன்பை அவர்களுக்கு உணர்த்த ஏழரை ஆண்டுகளாக பல தொல்லைகள் கொடுத்தும், மனம் தளராத உறுதியுடன் தர்பபனேஸ்வரரை வந்து அடைந்து சாப விமோசனம் பெற்றார்.

சனி உருவான வரலாறு : சூரியனுக்குரிய மனைவியரில் ஒருத்தி உஷா. இவள் சூரியனின் வெப்பம் தாளாததால் தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி சாயாதேவி என்ற பெயரில் தங்கியிருந்தாள். சாயா தேவிக்கு சனீஸ்வரன் பிறந்தார். பின்னர் உண்மை தெரிந்தது. சூரியன் தன்னை ஏமாற்றிய மனைவியைக் கடிந்து கொண்டார். அவளுக்கு பிறந்த சனீஸ்வரனை வெறுத்து ஒதுக்கி விட்டார். சனி காசிக்கு சென்று விஸ்வநாதரை வணங்கி நவக்கிரக மண்டலத்தில் இடம் பெற்றார்.

வழிபடவேண்டிய முறை : அதிகாலை 5 மணிக்கு நள தீர்த்தத்தில் நீராடி, கரையில் உள்ள நள விநாயகர் மற்றும் பைரவரை வழிபட்டு பின்னர் கோவிலில் உள்ள கங்கா தீர்த்தக் குளத்தை வணங்க வேண்டும். அதன் பின்னர், ராஜகோபுரத்தை முழுவதுமாக பார்த்து வணங்க வேண்டும். சனீஸ்வரரின் இருப்பிடமான படிக்கட்டை வணங்க வேண்டும். முதல் பிரகாரத்தில் நள சரித்திரத்தை பார்த்து வணங்கவும். காளத்தி நாதரை வணங்க வேண்டும். அடுத்து கருவறையில் உள்ள மூலவர் அருள்மிகு தர்பனேஸ்வரரை தரிசிக்க வேண்டும். அதன் பின்னர் தியாகவிடங்கர் சன்னதிக்கு சென்று பக்தி வழிபாடு செய்ய வேண்டும். பின்னர் மரகத லிங்கத்தையும் அர்த்தநாரீஸ்வரரையும் துர்க்கை, சண்டிகேஸ்வரர், தரிசித்து வெளிப்பிரகாரம் செல்ல வேண்டும்.
அங்குள்ள தெய்வங்களுக்கு வழிபாடு செய்து பின்பு, கட்டைக் கோபுரத்துள் அருள்பாலிக்கும், அன்னை பிராணேஸ்வரியை வணங்கி அதன் பின்னர் தான் சனீஸ்வரரிடம் சென்று அர்ச்சனை செய்ய வேண்டும். சிலர் முதலிலேயே சனீஸ்வரர் சன்னதிக்கு சென்று விடுகின்றனர். இது சரியான வழிபாட்டு முறை அல்ல என்றும், சனி தோஷ நிவர்த்தி கிட்டாது என்றும் கூறுகின்றனர்.

வழிபட்டோர் : திருமால், பிரம்மா, இந்திரன், திசைப்பாலகர்கள், அகத்தியர், அர்ச்சுனன், நளன்

நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.

பூஜைவிவரம் : ஆறுகாலபூஜைகள்.

திருவிழாக்கள் :

வைகாசி – உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கொடியேற்றம் பின்னர் 18 நாட்கள் பெருவிழா எனப்படும் பிரம்மோத்சவம்,

புரட்டாசி பௌர்ணமி விசேஷம் தரும்,

நவராத்திரி மற்றும் விநாயகர்சதுர்த்தி,

அனைத்து சனிக்கிழமைகள் மற்றும் பிரதோஷம் நாட்களில் தீர்த்தத்தில் மூழ்கி பின்னர் வழிபட்டால் மேன்மை பெறுவது நிச்சயம்.

அருகிலுள்ள நகரம் : காரைக்கால்.

கோயில்முகவரி : ஸ்ரீசனீஸ்வரபகவான்ஆலயம்,

ஸ்ரீதர்ப்பாரண்யேவரசுவாமி, தேவஸ்தானம், திருநள்ளாறு – 609 607, காரைக்கால், பாண்டிச்சேரி மாநிலம்.

மேலும் படிக்க