• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புனித ஜான் போஸ்கோ

October 23, 2018 ta.wikipedia.org

ஜான் போஸ்கோ (16 ஆகஸ்ட் 1851 – 31 ஜனவரி 1888), இவர் ஒரு இத்தாலிய ரோமன் கத்தோலிக்கக் குருவாகவும், கல்வியாளராகவும் மற்றும் 19ம் நூற்றாண்டின் சிறந்த எழுத்தாளருமாக திகழ்ந்தார்.

ஜான் போஸ்கோ, இத்தாலி நாட்டில் உள்ள கஸ்ட்டல்நுவோ என்னும் நகரில் ஒரு ஏழை விவசாய குடும்பத்தில் பிரான்செஸ்கோ போஸ்கோ, மார்கரெட் ஒச்சீனா தம்பதியினருக்குஇளைய மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே ஒழுக்கத்திலும், ஆன்மீகத்திலும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தார்.

இவர் தனது ஒன்பதாவது வயதில் கண்ட கனவினால் தான் ஒரு குருவாவது என முடிவெடுத்தார். சிறைச்சாலைகளில் நிரம்பியிருந்த இளைஞர்களை சந்தித்து மனம் வெதும்பினார். இளைஞர்களின் வாழ்க்கை மேம்பட மீண்டும் தவறு செய்யாமல் இருக்க அவர்களுக்கு கைத்தொழில்களை கற்றுக்கொடுத்தார்.

மிகப்பெரிய ஆன்மிகவாதியான பிரான்சு டி சேல்சின் கொள்ளைகளால் ஈர்க்கப்பட்டார்.இவர் ஆண்களுக்காகதனியாக துறவற சபையினை துவக்கினார். அந்த சபைக்கு சலேசிய சபை என்று பெயர் வைத்தார்.

புனித மரிய மசரெல்லோ என்னும் பெண் துறவின் உதவியோடு பெண்களுக்கென தனியாக துறவற சபையினைத் தொடங்கினார். அந்த சபைக்கு சகாய அன்னை என பெயரிட்டார்.

1876ம் ஆண்டு பொது நிலையினருக்காக உழைப்பாளர்கள் என்னும் சபையினை தொடங்கினார்.இவர் தொடங்கிய இந்த மூன்று சபையின் நோக்கம் ஏழை, எளிய மக்களுக்கு பணிபுரிவதே ஆகும்.

1875-ம் ஆண்டு, “சலேசிய சுற்றுமடலை”என்னும் நூலை முதன் முதலில் எழுதினார். தற்போது ஐம்பதுக்கும் மேலான பதிப்புகளில், முப்பது மொழிகளில் இந்நூல் வெளி வந்துள்ளது.

இவர் தன் வாழ்நாளெல்லாம் ஏழை ,எளிய மக்களின் பிள்ளைகளின் கல்விக்காகவும், ஆதரவற்ற இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்தார். அனைவரும் கல்வி கற்க வழிவகை செய்தார். தண்டனை சார்ந்த கல்வி முறையை விடுத்து அன்பு சார்ந்த கல்வி முறையை பின்பற்றினார். இவரது இத்தகைய கல்வி முறை மக்களால் பாராட்டப்பட்டது.

1988-ம் ஆண்டு இவரது இறப்பின் நூற்றாண்டு நிகழ்வின் போது கத்தோலிக்க கிறிஸ்துவ மக்களின் திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல், ஜான் போஸ்கோவை “ இவர் இளைஞர்களின் தந்தை, ஆசிரியர் மற்றும் நண்பர் “ எனப் பிரகடனம் செய்தார்.

இவர் நிறுவிய சபைகள் உலகம் முழுவதும் பரவி, உலகின் பல நாடுகளிலும் சுமார் 2௦௦௦க்கும் மேலான விடுதிகள், ஆதரவற்ற இல்லங்கள், பள்ளிகள், விளையாட்டு குழுக்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு மையங்கள், விளையாட்டு பயிற்சி மையங்கள் ஆகியவை உள்ளன. இவருக்கு 1934-ம் ஆண்டு புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க