• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு நாகராஜா திருக்கோவில்

July 26, 2018 findmytemple.com

சுவாமி:நாகராஜர்.

மூர்த்தி:அனந்த கிருஷ்ணன்,சுப்ரமணிய சுவாமி,துர்க்கையம்மன்,ஸ்ரீ தர்ம சாஸ்தா.

தீர்த்தம்:நாகதீர்த்தம்.

தலவிருட்சம்:ஓடவள்ளி.

தலச்சிறப்பு:இக்கோவில் ஒரு நாகதோஷ பரிகார தலம்.இங்கு மாதக் கார்த்திகைகள் விசேஷம் தருவதாக கருதப்படுகிறது.இக்கோவிலுக்கு வெளியில் உள்ள தல விருட்சத்தை சுற்றி நாக சிலைகள் உள்ளன.இதில் மஞ்சள் மற்றும் பால் அபிஷேகம் செய்வது சிறப்பு ஆகும்.இந்த தலத்தில் மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது.கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது.வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது.இந்த நீருடன் சேர்ந்த மணலையே,கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும்,தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருக்கிறது.இந்த தலத்தில் உள்ள துர்க்கை சிலை,இங்கு உள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது.அதனால் அன்னை “தீர்த்த துர்க்கை” என்று அழைக்கப்படுகிறாள்.துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து,நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

அருகிலுள்ள நகரம்:நாகர்கோயில்

இருக்குமிடம்:கன்னியாகுமரியிலிருந்து 20 கி.மீ.

கோயில்முகவரி:அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோயில்,நாகர்கோவில் – 629 001, கன்னியாகுமரி மாவட்டம்.

மேலும் படிக்க