• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு காய்சினவேந்தன் திருக்கோவில்

July 13, 2017 findmytemple.com

சுவாமி : காய்சினவேந்தன், புஜங்கசயனம் கிழக்குப் பார்த்த திருமுக மண்டல்.

அம்பாள் : மலர்மகள், திருமகள்.

தீர்த்தம் : வருணநீருதி தீர்த்தம்.

விமானம் : வதசாரவிமானம்.

தல வரலாறு :

ஒரு சமயம் திருமால் இலக்குமி தேவியுடன் இந்நதிக் கரையில் தனித்திருந்த பொழுது பூவுலகுக்கு வந்தும் தன்னை ஒதுக்குகிறாரோ என பூமாதேவி சினங்கொண்டு பாதாளலோகம் செல்ல பூமி இருண்டு வறண்டது. தேவர்கள் எல்லாம் திருமாலிடம் முறையிட, திருமால் இலக்குமி தேவியுடன் பாதாள லோகம் சென்று சென்று பூமாதேவியை சமாதானம் செய்து இருவரும் சமமே என்று கூறி நட்புண்டாக்கி இரு தேவிமார்களுடன் இங்கே காட்சியிளிக்கிறார். பூமி தேவியை சமாதானம் செய்து பூமியை காத்ததால் பூமிபாலகர் என்ற திருநாமமும் ஏற்பட்டது.

இமயமலையில் மானுருவில் ரிஷியும், ரிஷிபத்தினியும் கொஞ்சி கொண்டிருக்க அங்கே வந்த இந்திரன் மானுருவில் இருந்த ரிஷியை தனது வஜ்ராயுதத்தால் அடித்து வீழ்த்தி பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளானார். வியாழ பகவானின் யோசனைப்படி இந்திரன் இங்கு வந்து பூமி பாலனை வேண்டி தீர்த்தத்தில் நீராட பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. தனது சாபவிமோசனத்தில் மகிழ்ந்த இந்திரன் திருமாலை நோக்கி பெரிய யாகம் செய்தான்.

திருமால் தோன்றி சாபவிமோசனம் அளித்தார். இங்கே பெருமாள் ஆதிசேஷன் மீது 12 அடியில் பள்ளி கொண்டுள்ளார். சயனப் பெருமாளின் திருப்பாதத்தை மூலஸ்தானத்தை சுற்றி வரும் போது ஜன்னல் வழியே தரிச்சிக்கலாம். பெருமாள் நாபியில் இருந்து ஒரு தாமரைக்கொடி சுவரில் பிரம்மன் வீற்றிருக்கும் தாமரையுடன் சேருகின்றது. இவர் மேனிக்கு எண்ணெய் காப்பு செய்ய 250 லிட்டர் எண்ணெய் உபயோகிக்கப்படுகிறது. இலக்குமியுமியும் பூமாதேவியும் பெரிய உருவங்களாக பெருமாளின் திருப்பாதத்தில் அமர்ந்துள்ளனர். இங்கு குழந்தைப் பேறுக்காக செய்யப்படும் பிரார்த்தனைகள் பொய்ப்பதில்லை.

நடைதிறப்பு :

காலை 9.௦௦ மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, நண்பகல் 1.00 மணி முதல் 6.00 மணி வரை நடைதிறந்திருக்கும்.

அருகிலுள்ள நகரம் : திருநெல்வேலி.

கோயில் முகவரி : அருள்மிகு காய்சினவேந்தன் திருக்கோவில்,திருபுளியங்குடி, தூத்துக்குடி மாவட்டம்.

மேலும் படிக்க