• Download mobile app
21 Oct 2025, TuesdayEdition - 3541
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப்பெருமான் கோவில் குணசீலம், திருச்சி மாவட்டம்

October 1, 2018 findmytemple.com

சுவாமி : ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப்பெருமாள்.

தீர்த்தம் : காவிரி,பாபவிநாசம்.

தலச்சிறப்பு : குணசீல மகரிஷி பெருமாளை வேண்டி தபசு செய்ததால் பிற்காலத்தில் குணசீலம் என்ற பெயராயிற்று.உச்சிகாலத்திலும் அர்த்தஜாமபூஜை இரவு 8.30 மணிக்கு நடைபெற்றதும்,ஸேவார்த்திகள் முகத்தில் பெருமாள் தீர்த்தம் தெளிப்பார்கள்.சித்தபிரமை மற்றும் பலதோஷங்கள் இதனால் தீருகின்றன என்பது ஐதீகம்.

பிரார்த்தனைகளாக சகஸ்ர தீப அலங்காரசேவை,கருடசேவை,கண்ணாடி அறை சேவை போன்றவை சிறப்பாக நடத்தப்பட்டுவருகிறது.நித்திய உற்சவம் நடைபெறுவதால் பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து தரிசிக்கும் பொழுது வாழ்வில் எல்லா நலன்களையும் பெற்று மோட்சம் பெறுவர்.

முடிகாணிக்கை காதுகுத்துதல் போன்ற பிரார்த்தனைகளை அய்யர்,ராயர்,சோழியர், செட்டியார்,நாயுடு சமூகத்தினர் இத்தலத்தில் குல தெய்வமாக வழிபட்டு வேண்டி நிறைவேற்றி வருகின்றனர்.

தலவரலாறு : இங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் பெருமாள் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.இவர் சுயம்பு மூர்த்தி ஆவார்.தாயாருக்கு என்று தனி சன்னதி இல்லை.பெருமாளின் மார்பில் தாயார் அலமேலுமங்கை அமர்ந்து அருள்பாலிப்பதே அதற்கு காரணம்.குணசீல மகரிஷி தவம் செய்த இடம் இது என்பதால் இந்த ஊரும் குணசீலம் என்று அழைக்கப்படுகிறது.இந்த மகரிஷியின் விருப்பப்படி மகாவிஷ்ணு,பிரசன்ன வெங்கடாஜலபதியாக இங்கே அருள்பாலித்து வருகிறார்.

மேலும் படிக்க