• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோவில்

August 11, 2018 findmytemple.com

சுவாமி:நாமபுரீஸ்வரர்.

அம்பாள்:தர்மசம்வர்த்தினி அம்பாள்.

தலவிருட்சம்:வில்வம் மரம்.

தலச்சிறப்பு:இவ்வாலயத்தில் லிங்கோத்பவர் ஸ்தானத்தில் மகாவிஷ்ணுவும், ஆஞ்சநேயர்க்கும் தனிக்கோவிலும்,அதன் எதிர்புறம் மகாலட்சுமி சன்னதியும் தனிக் கோவிலாக இருப்பது சிறப்புக்குரியது.இந்த ஆலயத்தில் சிவனையும்,விஷ்ணுவையும் வணங்கி பயன் அடைகிறார்கள்.இந்த ஆலயத்தில் சனி பிரதோஷத்தை விடவும்,புதன்கிழமை வரும் பிரதோஷம் மிக சிறப்பானது.பிரதோஷ காலத்தில் வழிபடும் மகாவிஷ்ணு,பிரம்மா ஆகியோரை தரிசிக்கலாம். புதனுக்கு,சனிஸ்வரனுக்கு ஆதிதேவதையாக மகாவிஷ்ணு அமைந்து உள்ளதால் சிவனையும், விஷ்ணுவையும் வணங்கினால் சனி,புதன் கிரகதோஷங்கள் நீங்கப்பெறுகிறது.

இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 25-ம் தேதி முதல்,தை மாதம் 10ம் தேதி வரை அதிகாலை 6.30 மணிக்கு மேல் 6.45 மணிக்குள் சூரியபகவான் தன்னுடைய ஒளிக்கதிர்களால் சிவபெருமானை சிவபூஜை செய்கின்ற அற்புதமாக காட்சி அளிக்கிறது.அந்த அற்புத நிகழ்வை மூன்று நிமிடமே காணலாம்.

நடைதிறப்பு:காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை,மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

கோயில் முகவரி:அருள்மிகு ஸ்ரீ தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத ஸ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோவில்,ஆலங்குடி,புதுக்கோட்டை மாவட்டம்.

மேலும் படிக்க