• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோவில்

April 11, 2019 www.findmytemple.com

சுவாமி : அருள்மிகு சாரங்கபாணி சுவாமி.

அம்பாள் : அருள்மிகு கோமளவல்லி.

மூர்த்தி : ஆராவமுதன்.

தீர்த்தம் : பொற்றாமரைத் திருக்குளம்,காவிரி.

தலச்சிறப்பு : 108 திவ்ய தேசங்களில் இது 12வது திவ்ய தேசமாகும். ஹோம மகரிசியின் மகளாக வளர்ந்து கொண்டிருந்த லக்ஷ்மியை இத்தலத்திற்கு மகர சங்கராந்தியன்று, வைதீக விமானத்துடன் கையில் சாரங்கம் என்னும் வில்லுடன் வந்து இறங்கிய திருமால் மணந்து கொண்டு அர்ச்சாரூபியானார். ராமபிரானிடம் வீடணன் பெற்று வந்த ஆராதனா விக்ரகம், திருவரங்கத்தில் பிராணா வாக்ருதி என்னும் விமானத்துடன் பள்ளி கொண்டு விட, வைதீக விமானத்துடன் சாரங்கபாணியாக குடந்தையிலும் அரச்சாரூபியாகி அருள்புரிந்தார். உபயபிரதான திவ்யதேசம் என்னும் சிறப்புடைய தலம்.

வழிபட்டோர் : ஹேமமகரிஷி.

பாடியோர் : பேயாழ்வார், பூதத்தாழ்வார், ஸ்ரீஆண்டாள், திருமழிசை யாழ்வார், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் (மொத்தம் 52 பாடல்கள்).

நடைதிறப்பு : காலை 7.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

பூஜை விவரம் : ஆறு கால பூஜை.

திருவிழாக்கள் :

சித்தரை திருவிழா,

பவித்ரோத்சவம்,

ஜேஷ்டாபிஷேகம் நவராத்திரி,

அத்யயனஉற்சவம்,

மாசிமகம்,

தெப்ப திருவிழா,

பங்குனியில் தாயார் திருவிழா,

திருக்கல்யாணத் திருவிழா.

அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.

கோயில் முகவரி : அருள்மிகு சாரங்கபாணிசுவாமி திருக்கோவில்,

கும்பகோணம் நகர் & வட்டம், தஞ்சை மாவட்டம்.

மேலும் படிக்க