• Download mobile app
24 Oct 2025, FridayEdition - 3544
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில்

March 27, 2018 findmytemple.com

சுவாமி : அருள்மிகு சங்கரநாராயணசுவாமி, அருள்மிகு சங்கரலிங்க சுவாமி.

அம்பாள் : அருள்தரும் கோமதி அம்மன்.

தீர்த்தம் : நாகசுனை.

தலவிருட்சம் : புன்னை மரம்.

தலச்சிறப்பு : பாண்டிய நாட்டு பஞ்ச தலங்களில் இது பிருதிவிதலம் (மண் தலம்). இங்கு உள்ள  புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது.புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள்.பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து,தேவியின் மகிமைகளை  உலகறியச் செய்தார்.

இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. மார்ச் மாதம்  21, 22, 23, ஆகிய நாட்களிலும், செப்டம்பர் மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும் சூரியன் உதிக்கும் போது,அதன் ஒளி சங்கரலிங்கர் மீது விழுவதை இன்றும் காணலாம்.சூரிய பகவான் சங்கரலிங்கரை இந்நாட்களில் வழிபட்டு வருகிறார் என்று தல புராணம் கூறுகிறது.

நடைதிறப்பு : காலை 5.00 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள நகரம் : ராஜபாளையம்.

கோயில் முகவரி : அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில்,சங்கரன்கோவில் – 627 756, திருநெல்வேலி மாவட்டம்.

மேலும் படிக்க