• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நம்பிக்கையோடும் பாதுகாப்பாகவும் இருங்கள்: கேரளா மக்களுக்காக குரல் கொடுத்த கோலி!!

August 18, 2018 tamilsamayam.com

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு ஆதரவாக,இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது.இதனால்,மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களுக்கு நாளை வரை ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளா முதல்வா் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,“கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கேரளாவில் கனமழை பெய்துள்ளது.தற்போது வரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 போ் உயிரிழந்துள்ளனர்.2 லட்சத்து 23 ஆயிரத்து 139 போ் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.80 அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரக்கூடிய நீா் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் கேப்டன் கோலி கேரளா வெள்ளப்பெருக்கு குறித்து ட்விட் ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.அதில்,“கேரளாவில் உள்ள அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்,முடிந்தவரை அனைவரும் தங்கள் வீட்டிலே இருக்கவும்.விரைவில் இயல்புநிலை திரும்பும் என நம்புகிறேன்.மேலும்,இந்த மோசாமான சூழலில்,தங்களின் முழு ஆதரவையும் வழங்கிய இந்திய ராணுவத்திற்கும்,தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நம்பிக்கையோடும்,பாதுகாப்போடும் இருங்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க