• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தடுமாற்றம்

August 2, 2018 தண்டோரா குழு

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி,9 விக்கெட்டு இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்ஹாமில் துவங்கியது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்,முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் அடுத்தடுத்து வெளியேறினர்.பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் பேரிஸ்டோவ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர்.

ரூட் 80 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டானார்.பேரிஸ்டோவ் 70 ரன்களில் வெளியேற,அடுத்து வந்த பட்லர் ‘டக்’ அவுட்டானார்.ஸ்டோக்ஸ் (21), ரசித் (13), பிராட் (1) அடுத்தடுத்து வெளியேற இறுதியில்
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில்,9 விக்கெட்டு இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய அணி சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டும்,ஷமி 2 விக்கெட், உமேஷ் யாதவ், இஷாந்த் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

மேலும் படிக்க