• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் பிரித்வீ ஷாக்கு வாய்ப்பு

September 5, 2018 தண்டோரா குழு

இங்கிலாந்திற்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் பிரித்வீ ஷாக்கு வாய்ப்புளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.டி20 தொடரை இந்தியாவும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி லண்டனில் துவங்குகிறது.இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய லெவன் அணியில் இளம் வீரர் பிரித்வீ ஷாவுக்கு வாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும்,காயத்தால் அவதிப்படும் அஷ்வினுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இப்போட்டி,இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குக் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க