October 16, 2026
தண்டோரா குழு
இந்தியாவின் முன்னணி எஸ்யூவி தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் , தனது முதல் மெயின்ஸ்ட்ரீம் சிஎன்ஜி பயணிகள் வாகனமான ‘எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இசட்என்ஜி ‘ காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் தொடக்க விலை ரூ. 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.
சிஎன்ஜி பிரிவில் எக்காலத்திலும் சமரசம் செய்யப்படாத ஓட்டுநர் அனுபவத்தை ‘எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இசட்என்ஜி’ வழங்குகிறது. சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு முறைகளிலும் 82 கேடபிள்யூ பவர் மற்றும் 200 என்எம் டார்க் திறனை வழங்கும் டர்போசார்ஜ்டு எஞ்சின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது சுறுசுறுப்பான செயல்திறனுடன், 24.7 கிமீ/கிலோ சான்றளிக்கப்பட்ட மைலேஜையும் இணைத்து வழங்குகிறது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஓட்டுநர் மகிழ்ச்சியைக் குறைக்காமல், குறைந்த இயக்கச் செலவின் பலனைப் பெறலாம். இந்த வரிசை முழுவதுமே சிஎன்ஜி செயல்திறனைத் தாண்டி, டர்போசார்ஜ்டு செயல்திறன், துணிச்சலான வடிவமைப்பு, விசாலமான இடம்,மேம்பட்ட தொழில்நுட்பம், சௌகரியம் மற்றும் பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் ஈர்க்கக்கூடிய விலையில் வழங்குகிறது. இது சிஎன்ஜி எஸ்யூவி வாங்குபவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.குறிப்பாக, சக்திவாய்ந்த மற்றும் பல வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட வாகனத்தைத் தேடும் முதல்முறை எஸ்யூவி வாங்குபவர்களுக்கு, ‘எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இசட்என்ஜி ‘ மிகவும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றுகிறது.
இதன் தொடக்க வேரியண்ட்டில் இருந்தே, 26.03 செமீ எச்டி டச் ஸ்கிரீன், க்ரூஸ் கண்ட்ரோல், பின்வரிசை ஏசி வென்ட்கள் மற்றும் 60:40 என்ற விகிதத்தில் பிரிக்கக்கூடிய பின் இருக்கைகள் போன்ற பிரீமியம் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சிஎன்ஜி காரின் குறைந்த செலவுப் பலனுடன், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ-வின் தனித்துவமான தோற்றம், தொழில்நுட்பம் மற்றும் நடைமுறைப் பயன்பாடு ஆகியவற்றை ஓட்டுநர் உற்சாகத்தில் எவ்வித சமரசமும் இன்றி அனுபவிக்க முடியும்.
மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டீவ் வணிகப் பிரிவுத் தலைவர் டாக்டர் வேலுசாமி ஆர் கூறுகையில்,
“எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இசட்என்ஜி வாகனம் ஒரு தெளிவான வாக்குறுதியுடன் வருகிறது: ‘எதிலும் சமரசம் இல்லை’ (இன்றைய வாடிக்கையாளர்கள் எஸ்யூவி காரின் விசாலமான இடம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர் அனுபவத்துடன், சிஎன்ஜி-யின் குறைந்த இயக்கச் செலவையும் விரும்புகிறார்கள். இந்தப் பிரிவிலேயே சிறந்த டார்க் திறன், டர்போசார்ஜ்டு செயல்திறன் மற்றும் சிறந்த மைலேஜ் ஆகியவற்றுடன், சிஎன்ஜி-யின் நடைமுறைப் பயன்பாட்டையும் எஸ்யூவி-யின் உற்சாகத்தையும் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இஸ்சிஎன்ஜி ஒன்றாக இணைக்கிறது. இது ஒரு சிஎன்ஜி எஸ்யூவி மீதான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்குப் புதிய அளவுகோலை அமைக்கிறது,” என்று கூறினார்.