• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதல் பந்திலேயே வெளியேறிய தினேஷ் கார்த்திக்

July 26, 2018 tamilsamayam.com

இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் இரண்டாவது நாளின் முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் வெளியேறினார்.இந்திய அணி முதல் இன்னிங்சில் 395 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி,3 டி-20,3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.டி-20 தொடரை இந்திய அணி (2-1) வென்றது.ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி (2-1) கைப்பற்றியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.இதற்கு முன்பாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எக்ஸ்சஸ் அணிக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கிறது.

இந்த பயிற்சிப்போட்டி இங்கிலாந்தின் கிளம்ஸ்போர்டில் நடக்கிறது.முதலில் நான்கு நாட்கள் நடக்கயிருந்த இந்த போட்டி,மைதானம் மிக மோசமாக இருப்பதால்,மூன்று நாட்களாக குறைக்க வேண்டும் என்ற பிசிசிஐ.,யின் கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து அணி போட்டியை 3 நாட்களாக குறைத்தது.

இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 299 ரன்கள் எடுத்துள்ளது.தினேஷ் கார்த்திக்(82),ஹர்திக் பாண்டியா (33) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதையடுத்து இரண்டாவது நாளின் முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.பின் வந்த கருண் நாயர் (4),ரவிந்திர ஜடேஜா (15) ஏமாற்றினர்.ஹர்திக் பாண்டியா (51) அரைசதம் அடித்து கைகொடுத்தார்.இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 395 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மேலும் படிக்க