• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியா,இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம்

September 6, 2018 தண்டோரா குழு

இந்தியா,இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா,3 டி20 போட்டிகள்,3 ஒருநாள் போட்டிகள்,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.டி20 தொடரை இந்தியாவும்,ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது.5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்குகிறது.இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய லெவன் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.தொடக்க வீரர் ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் பிரித்வீ ஷாக்கு வாய்ப்புளிக்க திட்டமிட்டுள்ளதாகவும்,அதே போல காயத்தால் அவதிப்படும் அஷ்வினுக்கு பதிலாக ரவிந்திர ஜடேஜாவும்,பாண்ட்யாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரி அணியில் சேர்க்கப்படவுள்ளனர்.

இங்கிலாந்து அணியில் வோக்ஸ்,போப் ஆகிய இருவரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.இப்போட்டி,இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குக் பங்கேற்கும் கடைசி டெஸ்ட் போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க